பான் அட்டை என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், அவற்றில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற பல்வேறு நிதி தொடர்பான பணிகளுக்கு பான் எண் (PAN) அவசியமாக உள்ளது.. இந்த சூழலில் பான் என்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டது.. இதற்கான காலக்கெடு வருமான வரித்துறையால் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டு, மார்ச் 31, 2022 வரை கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால், இந்த தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு அவர்களின் பான் எண் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டது..
எனினும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்கள், 2023, மார்ச் வரை பான் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.. பெரும்பாலான பான் கார்டு பயனர்கள் ஏற்கனவே தங்கள் ஆதாரை பான் உடன் இணைத்துள்ளனர். ஆனால் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்டுகள் ஏப்ரல் 1ம் தேதி செயலிழந்துவிடும் என்று வருமான வரித்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. இருப்பினும், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட இந்த விதிக்கு இன்னும் சில விதிவிலக்குகள் உள்ளன. ஆம்.. சில நபர்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க தேவையில்லை.. கடந்த 2017-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கீழே உள்ள 4 வகைகளுக்கும் பான்-ஆதார் இணைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க தேவையில்லை..?
- அசாம், மேகாலயா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் வசிப்பவர்கள்
- வருமான வரிச் சட்டம், 1961 இன் படி குடியுரிமை இல்லாதவர்
- 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்
- இந்தியாவின் குடிமகனாக அல்லாதவர்கள்
பான் எண்ணுடன் எப்படி ஆதாரை இணைப்பது..?
- வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- “Link Aadhaar” பகுதிக்குச் செல்லவும்.
- உங்கள் PAN எண்ணை உள்ளிடவும்
- உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்
- ஆதாரில் உள்ள உங்கள் பெயரை உள்ளிடவும்
- “I have only year of birth on Aadhaar Card” என்பதைக் கிளிக் செய்யவும்
- “I agree to validate my Aadhaar details with UIDAI” என்பதைக் கிளிக் செய்யவும்
- கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும்
- link Aadhaar என்ற விருப்பத்தை உள்ளிடவும்
எஸ்எம்எஸ் மூலம் எப்படி இணைக்கலாம்..?
- UIDPAN 12 என்று டைப் செய்து ஸ்பேஸ் விட்டு, 12 இலக்க ஆதார் எண் டைப் செய்து ஸ்பேஸ் விட்டு, 10 இலக்க பான் எண்ணை டைப் செய்ய வேண்டும்…
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
ஆஃப்லைன் முறை
- NSDL அலுவலகத்தைப் பார்வையிடவும்.
- அதிகாரிகளிடம் உரிய விண்ணப்பப் படிவத்தைக் கேட்கவும்.
- சமர்ப்பிக்கும் போது தேவையான தகவலை உள்ளிடவும் மற்றும் துணை ஆவணங்களை இணைக்கவும்.
- உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டுகள் சரிபார்த்த பிறகு இணைக்கப்படும்.
உங்கள் ஆதார் உங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்
- வருமான வரித் துறையின் www.incometaxindiaefiling.gov.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
- இணையதளத்தின் இடது பக்கத்தில் உள்ள link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- பயனர் ஐடி, கடவுச்சொல், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளடக்கிய உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு சான்றுகளை உள்ளிடவும்.
- உங்கள் இரண்டு ஆவணங்களும் (ஆதார் மற்றும் பான்) இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த விவரம் அதில் காண்பிக்கப்படும்..