fbpx

”இதெல்லாம் விளம்பரத்துக்காகவே பண்றாங்க”..!! உதயநிதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு..!!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த 2ஆம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், வினித் ஜிண்டால் தொடர்ந்த மற்றொரு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் இத்தகைய மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. நாடு முழுவதும் 40-க்கும் அதிகமான வழக்குகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஒரு விளம்பர நோக்கத்துடனே இவர்கள் செய்கிறார்கள். மனு தாக்கல் செய்துவிட்டு பிறகு வெளியே வந்து ஊடகங்களிடம் பேட்டி அளிப்பதற்காக தான் இதை செய்கிறார்கள். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஏற்கனவே இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், நோட்டீஸ் பிறப்பிக்க மறுத்துவிட்டனர்.

Chella

Next Post

”கொரோனாவை விட கொடியது தடுப்பூசி”..!! ”மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எலான் மஸ்க்”..!! வெடித்தது புதிய சர்ச்சை..!!

Wed Sep 27 , 2023
கொரோனா பிடியில் இருந்து உலகம் இன்னமும் முழுமையாக மீளவில்லை. நாள்தோறும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருகிறார்கள். இதற்கிடையே, புதிய ரக கொரோனா திரிபுகள் குறித்தும் அவ்வப்போது அச்சுறுத்தல்கள் எழத்தொடங்கி இருக்கின்றன. கொரோனா பிடியிலிருந்து உலகைக் காத்ததில் தடுப்பூசிக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்ட தடுப்பூசியின் நற்பலன்கள் காரணமாக உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிர் பிழைத்துள்ளனர். ஆனாலும், இந்த தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பான பிரச்சாரம், […]

You May Like