fbpx

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!… விலை குறைப்போம் என பொய் வாக்குறுதி!… வெட்கமே இல்லாத திமுக!… Annamalai விமர்சனம்!

Annamalai: சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, தற்போது மக்களவை தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க திமுகவுக்கு வெட்கமாக இல்லையா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற மக்களவை தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது. திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது மக்களவை தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?

இதுபோக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்த தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது திமுக. பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Readmore: தொடரும் அவலம்..! மீண்டும் தமிழக மீனவர்கள் 20 பேரை கைது செய்த இலங்கை கடற்படை…!

Kokila

Next Post

Holiday: மார்ச் 22, 23 மற்றும் 24 தொடர் விடுமுறை...! சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்...!

Thu Mar 21 , 2024
பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 570 சிறப்பு பேருந்துகள் மார்ச் 24 அன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; மார்ச் 22,23 மற்றும் 24 வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை […]

You May Like