தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பும், திறந்த பின்பும் செய்ய வேண்டிய அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் ஜூன் 7-ம்தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த நிலையில் பள்ளி வளாகத்தை சுத்தமாகவைத்திருப்பது குறித்தும் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பள்ளி கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.