fbpx

அவ்வளவும் பிஞ்சு குழந்தைகள்!… கல்லறையான காஸா மருத்துவமனை!… 179 பேர் மொத்தமாக புதைக்கப்பட்ட அவலம்!

காஸா பகுதியின் மிகப்பெரிய மருத்துவமனை வளாகத்தில் பிஞ்சு குழந்தைகள் உட்பட 179 சடலங்களை மொத்தமாக புதைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காஸா மருத்துவமனைகள் மீது இரக்கமே இல்லாமல் கொடூர தாக்குதல்களை இஸ்ரேல் நிகழ்த்திவருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போரால் ஏற்கனவே மருத்துவமனைகளில் மருத்துவ அடிப்படை வசதிகள் அனைத்தும் செயலிழந்தும், நின்றுவிட்டதாலும், மக்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையில் எரிபொருள் விநியோகம் தீர்ந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 7 குழந்தைகளும், 29 நோயாளிகளும் மரணமடைந்தனர். மேலும், அடுத்தடுத்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், காஸா மருத்துவமனை ஒரு கல்லறையாக மாறியுள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் பேசியதாவது, சடலங்களை மொத்தமாக புதைக்கும் இக்கட்டான நிலையில் உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அல் ஷிஃபா மருத்துவமனை வளாகம் எங்கும் சடலங்களால் நிரம்பியுள்ளதாக கூறும் நிர்வாகிகள், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சடலங்களை உரிய முறையில் பாதுகாக்க முடியாத சூழல் இருப்பதால், அழுகி துர்நாற்றம் வீசுவதாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஒருவர் அங்குள்ள நிலையை குறிப்பிட்டு, இது மனிதாபிமானமற்ற செயல், மின்சாரம் இல்லை, குடிநீர், உணவு என எதுவும் இல்லை என கண்கலங்கியுள்ளார். இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை அடுத்து அல் ஷிஃபா மருத்துவமனையானது கடந்த வாரம் 72 மணி நேரம் முடக்கப்பட்டது. ஹமாஸ் படைகளின் தலைமையகம் தொடர்புடைய மருத்துவமனையின் கீழே சுரங்கத்தில் செயல்படுவதாக இஸ்ரேல் தரப்பு வாதிட்டுள்ளது. மட்டுமின்றி, மருத்துவமனை மற்றும் நோயாளிகளை மனித கேடயமாக ஹமாஸ் பயன்படுத்தி வருவதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனிடையே, அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து தப்ப முடியாமல் சிக்கியவர்கள் எண்ணிக்கை 10,000 என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அவர்கள் உயிருக்கு உத்தரவாதாம் இல்லை என்றே அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சடலங்கள் குவிந்து அழுகிப்போகத் துவங்கியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அழுகிய உடல்களைப் புதைப்பதறகாக மருத்துவமனையை விட்டு வெளியேற இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்காததால், நாய்கள் இப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து சடலங்களை உண்ணத் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவமனையின் மேலாளர் மருத்துவர் மொஹமட் அபு செல்மியா பிபிசியிடம் தெரிவித்தார். மின்தடை காரணமாக இன்க்யுபேட்டர்களில் வைக்கப்பட முடியாமல் இருக்கும் டஜன் கணக்கான குறைமாத குழந்தைகளின் நிலை குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன. அவற்றில் ஏழு குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டதாக செல்மியா கூறினார்.

மேலும் பேசிய மருத்துவர் அபு செல்மியா, அவர் மருத்துவமனையின் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, அங்கு கிடக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முயற்சித்து வருவதாகக் கூறினார். சுமார் 150 சடலங்கள் மருத்துவமனையில் இருந்ததாகவும் கூறினார். ஆனால் தற்போது அது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது என்று அவர் தெரிவித்தார். மேலும், மருத்துவமனைக்குள் வந்த நாய்கள் பிணங்களை உண்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Kokila

Next Post

'கமல் பேச்சுக்கு ஒரு மரியாதையே இல்ல போல.’.!! மாயா மீது ஏறி படுத்து..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Wed Nov 15 , 2023
விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஷோவானது தற்போது பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதில் விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த மாயாவும் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். கமலின் பெரிய சப்போர்ட் மாயாவுக்கு இருப்பதால் தான் அவருக்கு எதிராக கமல் ஒரு வார்த்தை கூட கடுமையாக கண்டித்து பேசாமல் ஜோவிகாவையும், பூர்ணிமாவையும் தான் […]

You May Like