fbpx

அனைத்து பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்ள தகுதியானவர்கள்; உச்ச நீதிமன்றம்..!!

பெண்கள் சட்டபூர்வமாக, பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு என உச்ச‌ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண்கள் எந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உள்ளது. அதன்படி பெண்கள் சட்டபூர்வமான, பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் கருக்கலைப்பு செய்து கொள்ள எல்லா பெண்களும் தகுதியானவர்கள் எனவும் திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை இருக்கிறது.

திருமணமான பெண்கள் மட்டுமே கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்வதை தடுக்கபட வேண்டியது அவசியம் என நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

Rupa

Next Post

இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல்..

Thu Sep 29 , 2022
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்‌, […]

You May Like