fbpx

செலவு மட்டும் செய்தால் போதும்!… ரூ.4 லட்சம் கிடைக்கும்!… பிரதமரின் சிறப்பு திட்டம் பற்றி தெரியுமா?

மக்களுக்கு காப்பீட்டு உதவிகளை வழங்க 2 முக்கியமான திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா ஆகிய இரண்டு திட்டங்களாகும். ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் மூலம் மருத்துவச் செலவில் ரூ. 4 லட்சம் வரை காப்பீடு பெறலாம். 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும். சொந்த வங்கி கணக்கு அல்லது தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 50 வயது நிறைவடைந்தவர்கள் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறலாம்.

இந்தத் திட்டத்தில் 436 ரூபாய் வருடாந்திர பிரீமியம் செலுத்த வேண்டும். ஏதேனும் காரணத்தால் மரணம் ஏற்பட்டால், 2 லட்சம் ரூபாய் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். மிக முக்கியமாக உங்களுடைய கணக்கில் நாமினி பெயரைச் சேர்க்க வேண்டும். அதற்கு வங்கியின் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் நேரடியாகச் சென்று இந்த வேலையை முடிக்கலாம். தபால் அலுவலக வங்கிக் கணக்கு இருந்தால் தபால் அலுவலகத்தில் இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் தானாகவே டெபிட் செய்யப்படும்.

அதேபோல, பிஎம் சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ், விபத்து காரணமாக இறப்பினால் ஏற்படும் ஊனத்திற்கான காப்பீடு கிடைக்கும். இத்திட்டம் பல ஆண்டுகளாக புதுப்பிக்கத்தக்கது. தனிப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள நபர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

அதேசமயம் விபத்து காரணமாக இறப்பு அல்லது ஊனம் ஏற்பட்டால், விபத்து மரணம் மற்றும் ஊனமுற்றோர் காப்பீடு ஆண்டுக்கு ரூ.20 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், பிரீமியம் தொகையானது கணக்கு வைத்திருப்பவரின் மொத்தத் தொகையின் அடிப்படையில் வாடிக்கையாளரின் கணக்கில் ஆண்டுதோறும் தானாகவே டெபிட் செய்யப்படும்.

Kokila

Next Post

’களமும் நமதே காலமும் நமதே’..!! '2026 கப்பு முக்கியம் பிகிலு’..!! திமுகவுக்கு போட்டியாக ஒட்டப்பட்ட விஜய் போஸ்டர்..!!

Sat Nov 11 , 2023
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அரசியல் கட்சியினர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த வகையில், கோவை ரயில் நிலையம் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் “விடியலின் ஒளி வந்தது! தினம் தினம் திருநாள் தந்தது!” […]

You May Like