இன்றைய சூழலில் ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு என்பது நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஏடிஎம் கார்டு நம் கைகளில் இருந்தால் பணத்தைச் செலவு செய்ய வங்கிகளில் கால் கடுக்கக் காத்திருந்து பணத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் மிக எளிதாகப் பொருட்கள் வாங்கலாம். ஏடிஎம் கார்டுகள் பல கூடுதல் நன்மைகளைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எனினும் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் வங்கிகள் காப்பீடுகள் வழங்கும் என்பது பற்றி தெரியுமா?
ஆர்பியை விதிகளின்படி தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் அட்டை பயன்படுத்திக் கொண்டிருந்த நபர், எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைய நேர்ந்தால், அவரது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு பெற முடியும். அனைத்து வங்கிகளுமே, தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டைகளை வழங்குகிறது.
ஆனால், விபத்து நேரிட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒருவேளை விமான விபத்தில் பலியாகியிருந்தால், அந்த விமான டிக்கெட், அவரது ஏடிஎம் அட்டை மூலம் பணம் செலுத்தி எடுத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் இருக்கின்றன.
கார்டுதாரரின் நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று காப்பீட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஏடிஎம் காரட்டின் இலவச காப்பீட்டை விபத்தின் எப்ஐஆர் நகல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து காப்பீட்டுக் கோரிக்கையைப் பெறலாம். கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் வகையைப் பொறுத்து ரூ.30,000 முதல் ரூ.10 லட்சம் வரை காப்பீட்டை ஒருவர் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.