fbpx

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் பிரபுதேவா- ரஹ்மான் இருவரும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது.

பிரபுதேவா தற்போது விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கேரளாவில் தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதுப் படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளது.

மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ், பிரவீன் இலக் உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து தயாரிக்கின்றனர். பிகைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. யோகி பாபு, அஜுவர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைக்கிறார். 

நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான ’காதலன்’, ‘மின்சாரக் கனவு’ உள்ளிட்டப் பல படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘என்னவளே அடி என்னவளே’, ‘பேட்டராப்’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களும் வெளியாகி இருக்கிறது. இந்த ஜோடி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இருவரின் ஸ்டைலிஷான புரோமோவும் வெளியாக உள்ளது. பொழுதுபோக்கு படமாக அதிக நகைச்சுவையுடன் படம் உருவாகி வருவதாக இயக்குநர் மனோஜ் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டில் 2025-ல் பான் இந்திய வெளியீடாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வர இருக்கிறது. ரசிகர்கள் இந்தப் படத்திற்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Next Post

கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானதா...? பரபரப்புக்கு மத்தியில் நிறுவனம் விளக்கம்...!

Thu May 2 , 2024
கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளது. கொரோன வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்க ஒட்டுமொத்த இந்திய மருத்துவ துறையுமே போராடியது. அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்கியது. அந்தவகையில், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி, நோவாக்ஸ், பைஃசர் என பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் தான் அதிகம் போடப்பட்டது. சில நாட்களுக்கு […]

You May Like