fbpx

Sarathkumar | பாஜகவுடன் கூட்டணி..? நெல்லை தொகுதியில் போட்டி..? ச.ம.க. தலைவர் சரத்குமார் பதில்..!!

நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இம்முறை திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணிகள் அமையவுள்ளன. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கடந்த முறை ஒரே அணியாக தேர்தலை சந்தித்த பாஜகவும், அதிமுகவும் தற்போது தனித்தனியாக களமிறங்கியுள்ள நிலையில், தங்களின் கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி, வருகின்ற தேர்தலில் எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து சமக தலைவர் சரத்குமார் பேசுகையில், ”கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஒருமனதாக முடிவு எட்டப்படவில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதற்கு மக்களவைத் தேர்தல் கூட்டணி முக்கியம். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

Read More : ’யாருமே எங்களை சேர்க்கல’..!! Lok Sabha தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டி..!! அதிரடியாக அறிவித்த கட்சி..!!

பாஜக பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. விரைவில் கூட்டணி குறித்தும், தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் தெரிவிக்கப்படும்” என்றார்.

Chella

Next Post

ஜூலை 1 முதல் நடைமுறை.! புதிய குற்றவியல் சட்டங்கள்.! தீவிரவாதம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை.!

Mon Feb 26 , 2024
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட போது இருந்த சட்டங்களான ஐபிசி, இந்திய சாட்சிய சட்டம் 1872 மற்றும் இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்கிதா மற்றும் பாரதிய சாட்சிய சன்கிதா ஆகிய சட்டங்கள் கடந்த […]

You May Like