fbpx

பாஜகவுடன் கூட்டணி..!! 9-வது முறையாக பீகார் முதல்வராகும் நிதிஷ் குமார்..?

பீகாரில் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்து நாளை மீண்டும் பீகார் முதல்வராக 9-வது முறையாக ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2020 சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. பாஜக 74 தொகுதிகளிலும், நிதிஷ்குமார் கட்சி 43 இடங்களிலும் வென்ற நிலையில், இருகட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது.

பாஜக அதிக இடங்களில் வென்றாலும் கூட முதல்வர் பொறுப்பு நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. அவர் முதல்வராக பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆனால், கடந்த 2022இல் பாஜக, நிதிஷ் குமார் இடையே பிரச்சனை உருவானது. அதாவது நிதிஷ் குமாரை நீக்கவிட்டு பாஜகவை சேர்ந்தவரை முதல்வராக்க அந்த கட்சி திட்டமிட்டது. இதையடுத்து, பாஜக கூட்டணிக்கு குட்பை சொன்ன நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முதல்வரானார். இது பாஜகவை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது.

இதற்கிடையே தான் ‘இந்தியா’ கூட்டணியில் தனக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கவில்லை. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பாளர் தரவில்லை என நிதிஷ் குமார் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். முதற்கட்டமாக அவர் பீகாரில் காங்கிரஸ் மற்றும் லாலு கட்சியுடன் இருக்கும் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் கைகோர்க்க திட்டமிட்டு வந்தார். தற்போது இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. அதன்படி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் நாளை மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் அவர் 9-வது முறையாக முதல்வராக உள்ளார்.

Chella

Next Post

”உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்”..!! அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்த சீமான்..!!

Sat Jan 27 , 2024
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சியின் ஆதிக்கம் சற்று ஓங்கியிருக்கக் கூடிய பகுதியாகும். இந்தச் சூழலில் திமுக நிர்வாகியை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் மனோ தங்கராஜை ”பால் வியாபாரி” என்றும், ”உனக்கு என்ன கொழுப்பு” இருக்கும் எனவும் சாடினார். மேலும், அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மகனுக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிடலாம் என துடித்துக் கொண்டிருக்கிறார் […]

You May Like