fbpx

ரூ.4,800 கோடி ஒதுக்கீடு…! துடிப்புமிக்க கிராம திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்…!

துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தின் 19 மாவட்டங்களில் உள்ள 46 எல்லைப்புற பகுதிகளின் விரிவான வளர்ச்சிக்காக மத்திய அரசின் துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் மாநிலங்களும் லடாக் யூனியன் பிரதேசமும் அடங்கும். இத்திட்டத்திற்கு 2022-23ம் ஆண்டு முதல் 2025-26ம் நிதி ஆண்டு வரை 4,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இத்திட்டத்தின் முன்னுரிமை அடிப்படையில் 662 எல்லைப்புற கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அருணாச்சலப் பிரதேசத்தில் 455 கிராமங்களும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 75 கிராமங்களும், லடாக்கில் 35 கிராமங்களும், சிக்கிமில் 46 கிராமங்களும், உத்தராகண்டில் 51 கிராமங்களும் இடம் பெற்றுள்ளன.

Vignesh

Next Post

தண்ணீர் பாட்டில்களில், டாய்லெட் சீட்டை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளன.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

Thu Mar 16 , 2023
கொரோனா பரவலுக்கு பிறகு, அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் புதிய ஆய்வில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது… அமெரிக்காவை தளமாகக் கொண்ட waterfilterguru.com என்ற இணையதளத்தின் சமீபத்திய ஆய்வின்படி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள், கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிக […]

You May Like