fbpx

பொன்முடியின் இலாகா அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு..!! வெளியானது அறிவிப்பு..!!

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். ரூ.50 லட்சம் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார். அதோடு, மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

குற்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றதால், பொன்முடி தனது எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனை அடுத்து அவர் வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் பதவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கியுள்ளீர்களா..? அரசின் சூப்பர் திட்டம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Dec 21 , 2023
கூட்டுறவு சங்கம், வங்கிகளில் தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் கீழ் கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவுள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கூட்டுறவு சங்கம், வங்கிகளில் தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு தீர்வு காணும் சிறப்பு கடன் தீர்வு திட்டம் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிக்கை ஒன்றை […]

You May Like