fbpx

DMK கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..? ஒப்பந்தம் கையெழுத்து..?

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன.

இதில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்து தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கிடையே மதிமுக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட அதே தொகுதிகளை மீண்டும் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

English Summary : Allotment of 2 seats to Communist Party of India in DMK alliance

Read More : OPS | பிரதமரின் செயலால் அப்செட்டான ஓபிஎஸ் அணி..!! கூட்டணியில் முறிவா..? பரபர தகவல்..!!

Chella

Next Post

BJP | தேசிய கட்சிகளின் ஆண்டு வருவாய் ரூ.3,077 கோடி..!! முதலிடத்தில் பாஜக..!! காங்கிரஸ் கட்சியின் செலவு மட்டுமே இவ்வளவா..?

Thu Feb 29 , 2024
கடந்த 2022 – 23ஆம் நிதியாண்டுக்கான தேசிய கட்சிகளின் ஆண்டு வருவாய் 3,077 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 2,361 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய கட்சிகள் ஆண்டுதோறும் தலைமை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கும் வருவாய், செலவினங்கள் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தனியார் அமைப்பு அறிக்கை […]

You May Like