fbpx

ரெடி..! அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஒதுக்கீட்டு இருக்கை விவரம்…! முன்கூட்டியே வெளியானது…!

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சி துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 330 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி, வருகின்றன. இவற்றில்‌ தற்போது 2023-2024-ம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ அரசு ஒதுக்கீட்டு இருக்கைகளின் சேர்க்கைக்கான ஒதுக்கீடு விவரங்கள்‌ 10.07.2023 அன்று வெளியிடப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்‌ தற்போது முன்கூட்டியே www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள்‌ தனது தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை மேற்குறிப்பிட்ட இணையதளத்திற்குள்‌ சென்று Login செய்து அறிந்து கொள்ளலாம்‌. அதன்பிறகு சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தமது அசல்‌ சான்றிதழுடன்‌ நேரில்‌ சென்று உரிய கட்டணம்‌ செலுத்தி சேர்க்கையினை உறுதிசெய்ய வேண்டும்‌. இதற்கானகடைசி தேதி 12.07.2023 ஆகும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு!... எதற்கு தெரியுமா?

Thu Jul 6 , 2023
ரேஷன் அட்டைகளை ஆதாருடன் இணைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்கும் பணியை ஜூன் […]

You May Like