fbpx

தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதியா..? அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சொன்ன சூசக பதில்..!!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய சிறுதானியங்களை கண்டுபிடிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் ஏக்கர் பரப்பில் சிறுதானியங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி என்பது இப்போதைக்கு இல்லை என்றும் கோரிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அரசு அனைவரிடமும் கலந்து ஆலோசிக்கும்” என்று கூறினார்‌.

தொடர்ந்து பேசிய அவர், சர்வதேச சிறுதானிய கருதரங்கானது வரும் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கு மூலம் சிறு தானியங்களின் உற்பத்தியை அதிகரித்தல், நுகர்வோர்களுக்கு இடையே சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கருத்தரங்கில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விஞ்ஞானிகள், இளம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.

Chella

Next Post

2000 ரூபாயை என்னிடம் கொடுங்கள்..!! ஆனால்..!! வித்தியாசமாக விளம்பரம் செய்த இறைச்சி கடைக்காரர்..!!

Thu May 25 , 2023
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதையடுத்து, தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ அனுமதி வழங்கியுள்ளது. இந்த நோட்டுகள் செப்டம்பர் 30 மேல் செல்லுபடி ஆகாது என தெரிந்து கொண்ட ஒரு கடைக்காரர் தனது விற்பனையை அதிகரிக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். […]

You May Like