fbpx

அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்கை விசாரிக்க அனுமதி…! ஆளுநர் சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம்…!

அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி விரைந்து இசைவாணை வழங்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்”முன்னாள்‌ அதிமுக அமைச்சர்கள்‌ மீது உள்ள ஊழல்‌ வழக்குகளில்‌ நீதிமன்ற விசாரணையை துவக்குவதற்கு தேவையான இசைவு ஆணையை விரைந்து அனுப்புமாறும்‌, மாநில அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில்‌ ஒப்புதல்‌ அளிக்குமாறும்‌ தமிழ்நாடு ஆளுநர்‌ அவர்களுக்கு 3.7.2023 அன்று கடிதம்‌ எழுதியிருந்தேன்‌.

அந்த கடிதத்திற்கு. பதிலளிக்கும்‌ விதமாக 6.7.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள ராஜ்பவன்‌ பத்திரிக்கை செய்தியில்‌ உண்மைக்கு புறம்பான தகவல்கள்‌ இருப்பதை கண்டுஅதிர்ச்சியடைந்தேன்‌.

முன்னாள்‌ அதிமுக அமைச்சர்‌ கே.சி.வீரமணி மீதான ஊழல்‌ வழக்கு தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட விசாரணை அறிக்கைகிடைக்க பெறவில்லை என்றும்‌, முன்னாள்‌ அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.விஜயபாஸ்கர்‌ ஊழல்‌ வழக்கிற்கு இசைவாணை கேட்டு எந்த கோரிக்கையும்‌ ராஜ்பவனில்‌ இருந்து பெறப்படவில்லை என்றும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

50 ஓவர் உலகக்கோப்பை தொடர்!... இறுதி அணியாக மாஸ் என்ட்ரி கொடுத்த நெதர்லாந்து!

Fri Jul 7 , 2023
உலகக்கோப்பை 2023 தொடரில் விளையாடும் பத்தாவது அணியாக நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் மீதமுள்ள 2 அணிகளுக்காக ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளின் அடிப்படையில் நெதர்லாந்து அணி இறுதி அணியாக தகுதி பெற்றுள்ளது. தகுதிச்சுற்று போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் […]

You May Like