fbpx

ஒரேபாலின தம்பதிகள் தத்தெடுப்பதை அனுமதிப்பது குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்! குழந்தை உரிமைகள் குழு!

ஒரேபாலின பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் பாலின பாத்திரங்கள் மற்றும் அடையாளத்தைப் பற்றிய அவர்களின் புரிதலை பாதிக்கும் என்றும் பாரம்பரிய பாலின முன்மாதிரிகளை மட்டுப்படுத்தலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏப்ரல் 18ஆம் தேதி விசாரிக்கத் தொடங்கும். ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அதே போல் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இருந்த வழங்குகளை மாற்றி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில், ஒரே பாலினத்தவர் குழந்தைகளை தத்தெடுப்பது சமூக மற்றும் உளவியல் அம்சங்களில் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறி, ஒரே பாலின திருமண மனுக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. NCPCR, மத்திய தத்தெடுப்பு வள ஆணைய வழிகாட்டுதல்கள் 2017 (CARA வழிகாட்டுதல்கள், 2017) விதிகளை மேற்கோள் காட்டிய, அங்கு எந்த சூழ்நிலையிலும் தன் பாலின ஆண் தம்பதிகல் ஒரு பெண் குழந்தையை தத்தெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என NCPCR தெரிவித்துள்ளது. “ஓரினச்சேர்க்கை தம்பதிகள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க அனுமதிப்பது சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 விதிகளுக்கு எதிரானது” என்று அது மேலும் கூறுகிறது.

“தத்தெடுக்கப்படும், குழந்தையின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஓரிரு பாலினத்தவர்களால் தத்தெடுக்கப்படும் குழந்தை சமூக மற்றும் உளவியல் அம்சங்களில் பெருமளவு பாதிக்கப்படுவட்தை பல மன நல ஆய்வுகள் கூறியுள்ளன” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரே பாலின பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள், இதர குழந்தைகளை போல் அல்லாமல், குழம்பி போய் பாலின பாத்திரங்கள் மற்றும் பாலின அடையாளத்தைப் பற்றிய அவர்களின் புரிதலை பாதிக்கலாம் என்று குழந்தை உரிமைகள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இந்த குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் என NCPCR உச்ச நீதிமன்றத்திடம் மேலும் கூறியது.

என்சிபிசிஆர் தனது மனுவில், குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCRC) செப்டம்பர் 1990 இல் நடைமுறைக்கு வந்தது என்றும் 195 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட, இது உலகில் மிகவும் “பரவலாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் ஒப்பந்தம்” ஆகும். “இருப்பினும், ஒரே பாலின தம்பதிகள் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்று UNCRC இல் குறிப்பிடப்படவில்லை” என்று குழந்தை உரிமைகள் அமைப்பு கூறியது.

Kokila

Next Post

ஐபிஎல்லில் அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர்!... மகன் குறித்து சச்சின் உருக்கமான பதிவு!

Tue Apr 18 , 2023
தன் மகன் ஐபிஎல்-லில் முதல் முறையாக அறிமுகமாகி விளையாட துவங்கியது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த உருக்கமான ட்விட் வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். 23 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த 2018-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் யு-19 இந்திய அணிக்காக அறிமுகமாகி பலரது […]
மகனுக்கு வாய்ப்பு கொடுக்காத மும்பை அணி..! அதிருப்தியில் இருக்கிறாரா சச்சின்..?

You May Like