fbpx

’ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்..!!

பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, சுமார் 2,300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பணிக்காலம் கடந்த 31ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால், கொரோனா கால ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

’ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்..!!

இந்நிலையில், பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும். மக்களை தேடி மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு ஒப்பந்த செவிலியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஏற்றார் போல பணியை வழங்கும்” என்று கூறினார்.

Chella

Next Post

அடடே சூப்பர்..!! போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இப்படி ஒரு திட்டமா..? சென்னையில் அறிமுகம்..!!

Mon Jan 2 , 2023
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி Live Traffic Monitor சிஸ்டம் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் மக்கள் அதிகளவு தனி நபர் வாகன போக்குவரத்தை மேற்கொண்டு வருவதால், முக்கிய சாலைகளில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து வருவது வழக்கம். அதிலும் வார இறுதி மற்றும் முக்கிய நாட்களில் சமாளிக்க முடியாத அளவில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதற்காக போக்குவரத்து காவல்துறையினர் மாற்று சாலைகளில் வாகனங்களை மாற்றி விடுவார்கள். இந்நிலையில், […]

You May Like