fbpx

குழந்தைக்கு ‘இலாய்’ என பெயர்சூட்டிய அமலாபால் தேசாய் தம்பதி!! இந்த பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

நடிகை அமலாபாலிற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையின் பெயரை சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அதற்கான பெயர் அர்த்தம் இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலா பால், சிந்து சமவெளி, மைனா, தலைவா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். இதில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் மூலம் நடிகர் விஜயின் தளபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொடர்ந்து இயக்குநர் ஏ.எல் விஜயை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டு பிரிந்தனர். அதன்பின் சில படங்களில் தோன்றிய அமலாபால் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரது திருமணமும் ரோமன் கத்தோலிக்க முறையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணமான 2 மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார்.

 தன்னுடைய கர்ப்ப காலத்தை கணவருடன் கொண்டாடி வந்த அமலா பால், அவ்வபோது போட்டோ ஷூட் மற்றும் ரீல்ஸ் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அமலா பாலுக்கு, ஜூன் 11ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்ததாக அமலா பால் மற்றும் ஜெகத் தேசாய் இருவரும் நேற்று இரவு தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 

அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் அமலா பாலுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோவை அமலாபால் பகிர்ந்திருந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு இலாய்(ILAI) என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்திருந்தார்.  இந்த நிலையில் அதற்கான பெயர் அர்த்தம் இணையத்தில் பரவி வருகிறது.

இது யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியின் பெயர், இந்த பெயருக்கு தமிழில் பரலோகம், சொர்க்கம், விண்ணுலகம் என்று கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவின் மகன்களின் பெயர்கள் உயிர், உலக் என்று வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கும் உலகம் என்ற அர்த்தத்தில் பெயர் வரும் நிலையில் அதே போல நடிகை அமலாபாலும் தன்னுடைய குழந்தைக்கு உலகம் என்கிற வகையில் அர்த்தம் வருகிற மாதிரி பெயர் வைத்திருக்கிறாரோ என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

இது இருபாலருக்கும் வைக்கப்படும் பெயராக இருப்பதால் குழந்தை பிறப்பதற்கு முன்பே அமலாபால் இந்த பெயரை தேர்வு செய்து வைத்திருப்பாராக இருக்கும், அதனால் தான் குழந்தை பிறந்ததும் குழந்தையின் பெயரை உடனே அறிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

English Summary

Amalapal Desai couple named baby ‘Ilai’!! Do you know what this name means?

Next Post

ஷாக்!. உண்ணிகளால் ஏற்படும் நோய்களின் பரவல் அதிகரிப்பு!. நிபுணர்கள் எச்சரிக்கை!

Tue Jun 18 , 2024
How Are Hunters Helping To Track Massive Spread Of Tick-Borne Diseases In The US?

You May Like