விழுப்புரம் மாவட்ட எல்லை கிராமங்களில் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளனர் 2 மாவட்டங்களிலும் எல்லை பகுதிகளில் அமைந்திருக்கின்ற திருக்கனூர் நெட்டப்பாக்கம், சந்தை புதுகுப்பம், செட்டிபட்டு, திருபுவனம் போன்ற இடங்களில் அடிக்கடி வீடு புகுந்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வதை சிலர் வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் அமாவாசை தினம் நெருங்கி விட்டாலே அச்சத்தில் உறைய தொடங்கினர்.
10க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடந்த போதும் கூட காவல்துறையினர் கொள்ளையடிகளை பிடிக்கும் விவகாரத்தில் தீவிரம் காட்டாமல் இருந்தனர். இந்த நிலையில் கடைசியில் செட்டிப்பட்டி கிராமத்தில் காவல்துறை ஆய்வாளர் சண்முகம் என்பவரின் வீட்டிலேயே கை வைத்து கொள்ளையர்கள் தங்களுடைய வேலையை காட்டத் தொடங்கினர்.
இதன் பிறகு தான் காவல்துறையினர் கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் முழுமூச்சாக இறங்கினர். கூடுதல் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு ரோந்து பணி வாகன தணிக்கை என்று தீவிர தேடுதல் வேட்டையில் குதித்தனர். காவல்துறையினர். கடந்த மே மாதம் 31ஆம் தேதி திரட்டி அரங்கேற்றிவிட்டு தெனாவட்டாக சென்று கொண்டிருந்த கொள்ளையர்கள் 3 பேர் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் விநாயகபுரத்தைச் சேர்ந்த ஐயனார், தமிழ்ராஜ், சீனிவாசன் உள்ளிட்டோர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 9 பவுன் தங்க நகைகள் 3 திருட்டு பைக்குகள் வெல்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
கியாஸ் அடுப்பு சிலிண்டர் தோசை கல் போன்றவற்றை மூட்டை கட்டி எடுத்துச் சென்றதை பார்த்த காவல்துறையினர் வியப்பில் ஆழ்ந்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் காவல்துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்த போது பல்வேறு குற்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளனர். அகலில் நோட்டமிட்டு பிறகு அமாவாசை இருட்டில் திருடுவதை வழக்கமாக கொண்டிருந்த இந்த கொள்ளை கும்பல் ஒவ்வொரு திருடர்க்குப் பின்னரும் கொள்ளை அடித்த பணத்தில் இந்த சுற்றுலா சென்று மது விருந்து வைத்து கொண்டாடி இருக்கிறார்கள் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.