fbpx

அரை கீரையின் அசத்தல் நன்மைகள்..!! சிறுநீரகம், வயிற்று புண், கண் குறைபாடு, கருத்தரிக்க இதை சாப்பிட்டால் போதும்..!!

அன்றாட வாழ்வில் அரை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும். அரை கீரையில் அடங்கியுள்ள வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம், இதர தாதுக்கள் உடலை வலுவாக வைத்திருக்க துணை புரிகின்றன. அரை கீரையை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகமாகும். உடலை தாக்கும் தொற்று நோய்களில் இருந்து தப்பலாம். நல்ல கிருமி நாசினியாக செயல்படும் ஆற்றல் கொண்டது.

சிலருக்கு சரியான நேரத்தில் சாப்பிடாமல் வயிற்றில் குடல் புண்கள் ஏற்பட்டிருக்கும். இதனால் உணவை செரிக்க சிரமப்படுவார்கள். அவர்கள் அரை கீரையை குழம்பு, கூட்டு மாதிரி நன்கு வேகவைத்து உண்பதால் குடல் புண்கள் குணமாகும். எப்பேர்ப்பட்ட மலக்கட்டை ஆனாலும் அதை இளக செய்து மலச்சிக்கலை தீர்க்கும். வயிற்றில் ஏற்படும் புற்றுநோய் குடல், கணையம் ஆகியவற்றையும் பாதிக்கும். அரை கீரையை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்த வயிற்று புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு.

புற்று நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் நோயை கட்டுப்படுத்த ஆற்றல் கிடைக்கும். வண்டுகள், பூச்சிகள் ஆகியவை தீண்டும்போது அவற்றின் நஞ்சை முறிக்கும் ஆற்றல் அரை கீரைக்கு உள்ளது. சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் அரை கீரையை நாள்தோறும் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கூட கரையுமாம். நல்ல தண்ணீர் அருந்தி, அரை கீரையும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரை நன்கு பெருகும். நச்சுக்கள் வெளியேறும்.கல்லீரல் பாதிப்பால் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் ஆகிய நோய்கள் தாக்கி அவதிப்படுபவர்கள் ஏற்கனவே உண்ணும் மருந்துகளோடு அரை கீரையை அவ்வப்போது சாப்பிட்டால் விரைவில் கல்லீரல் தொடர்பான நோய்கள் தீரும்.

கருத்தரிக்க இயலாத பெண்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை அரை கீரை உண்ணலாம். இதனால் அவர்களின் கருப்பை வலு பெறும். சீக்கிரம் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டாக்கும். ஆண்கள் மனஅழுத்தம் காரணமாக இனப்பெருக்க நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும். இதனால் சிலருக்கு ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை ஆகிய குறைகள் வருகிறது. இந்த ஆண்கள் அடிக்கடி அரை கீரையை சாப்பிட்டால் ஆண்மை குறைவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

Read More : பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து..!! தமிழ்நாடு அரசின் முடிவு என்ன..? மத்திய அரசின் இந்த பாயிண்டை கவனிச்சீங்களா..?

English Summary

Women who are unable to conceive can eat half a spinach leaf two or three times a week.

Chella

Next Post

”இதில் இல்லாத சத்துக்களே இல்லை”..!! இதய நோய், புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் கேழ்வரகு..!! நீங்களும் சாப்பிட்டு பாருங்க..!!

Wed Dec 25 , 2024
Kale is rich in calcium, iron, magnesium, and phosphorus.

You May Like