fbpx

டிகிரி முடிச்சிருக்கீங்களா.. பிரபல அமேசான் நிறுவனத்தில் வேலை..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

சென்னையில் செயல்பட்டு வரும் அமேசான் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் அமேசான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

பணியிடங்கள் ;

டிவைஸ் அசோசியேட் (Device Associate),

டிவைசஸ் ஓஎஸ் (Device OS)

என்னென்ன தகுதி ?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் QA மெத்தோடோலஜி அண்ட் டூல்ஸ் (Methodology and Tools) தெரிந்திருக்க வேண்டும்.

சாப்ட்வேர் டெஸ்ட்டிங் அனுபவம் மற்றும் சான்றிதழ் படிப்பு முடித்திருந்தால் இன்னும் பிளஸ் பாயிண்டாகும். மேலும் விண்ணப்பம் செய்வோர் ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொபைல் பிளாட்பார்முக்கான டெஸ்ட்டிங் சாப்ட்வேருக்கு தேவையான எக்ஸிக்கியூட் டெஸ்ட் கேசஸ் கொடுப்பது, குவாலிட்டி செக் செய்வது, சாப்ட்வேர் டூல்ஸ் பயன்படுத்தி வேலிடேஷன், அனலிசிஸ் மற்றும் டே்டா கேப்ஃசர் உள்ளிட்டவற்றை தினமும் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.

Read more ; அண்ணாமலை இடத்திற்கு 6 பேர் கொண்ட குழு நியமனம்..!! பாஜக தலைமை அறிவிப்பு..!!

English Summary

Amazon IT company operating in Chennai is going to fill the vacancies. Degree completion candidates can apply for this job.

Next Post

பெண்களே..!! சுயதொழில் தொடங்க போறீங்களா..? தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Fri Aug 30 , 2024
Rs.50,000 is given to 200 women for self-employment out of Rs.1 crore allocation.

You May Like