மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் தற்போது பணி நீக்க நடவடிகளில் ஈடுபட்டுள்ளது.
மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் நிறைய லாபம் இல்லாத பிரிவுகளில் இருந்து வேலை ஆட்களை குறைக்கின்ற நடவடிக்கைகளை துவங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதையும் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் இது பற்றிய செய்தி வெளியான நிலையில், தற்போது ஆட்குறைப்பு வேலையில் இறங்கியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் ரோபோட்டிக்ஸ் பிரிவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வந்துள்ளனர். பல பிரிவுகளில் அதிகம் லாபம் ஈட்டாத திட்டங்களை முடக்க தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, ஊழியர்களிடம் வேறு வேலைகளை தேடிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அமேசான் நிறுவனத்தின் ஒரு உயர் அதிகாரி பேசிய போது, “அமேசான் நிறுவனத்தில் அசாதாரணமான பொருளாதார சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, முதலீட்டு நடவடிக்கைகளில் திருத்தம் செய்யவும் பணி அமர்ந்துதல் விபரங்களை மறுசீராய்வு செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
இது ஒரு சவாலான விஷயம். ஆனால் இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு இது போன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.