fbpx

அம்பானி வீட்டு திருமணம்..!! விருந்தினர்களுக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறார்கள் தெரியுமா..?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் மார்ச் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.

ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இருவருடைய திருமணமும் மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் நடைபெறவுள்ளது. அம்பானி வீட்டு கல்யாணம் என்றால் சொல்லவா வேண்டும்..? இதற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில், திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு வழங்கும் பரிசுக்கு ஒரு சில முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு வருபவர்களுக்கு பதில் அன்பளிப்பு வழங்கும் விதமாக கையினால் செய்யப்படும் மெழுவர்த்தி வழங்கப்படவுள்ளது. இந்த மெழுகுவர்த்தியை மகாபலேஸ்வரில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளி கைவினைக் கலைஞர்கள் தயாரிக்கின்றனர்.

இது இந்தியாவின் பாரம்பரிய கலைகளையும், கைவினை கலைஞர்களையும் சிறப்பிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கைத்தறி, ஆடை அலங்கார பொருட்கள், கைவினை பொருட்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் மற்றும் கலைகளும் அங்கம் வகிக்கின்றன. “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் ஸ்வதேஷ் திறமையான கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கிறது. மேலும், திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

'Paytm' வங்கிக்கு 15 நாள் அவகாசம்..!! டெபாசிட் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!

Fri Feb 16 , 2024
வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படுவதை பிப்ரவரி 29ஆம் தேதியோடு நிறுத்த வேண்டும் என பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர் கணக்குகளில் டெபாசிட்கள், கிரெடிட் பரிவர்த்தனைகள் மற்றும் டாப்-அப்களை நிறுத்துவதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது. வாடிக்கையாளரின் கணக்குகளில் டெபாசிட் தொகை நிறுத்தப்படுவதற்கான தேதியை பிப்ரவரி 29, 2024 முதல் மார்ச் 15 வரை நீட்டித்துள்ளது. மேலும் பேடிஎம் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள […]

You May Like