முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தை முறைப்படி அறிவிக்கும் விதமாக மும்பையில் உள்ள அம்பானியின் இல்லமான அண்டிலியாவில் மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் இருவரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் ஷாருக்கான், ரன்பீர் கபூர் – ஆலியா பட், ஜான்வி கபூர், ரன்வீர் சிங், அயன் முகர்ஜி உட்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ராதிகா மெர்ச்சன்ட் : Encore Healthcare நிறுவனத்தின் சிஇஒ வீரேன் மெர்ச்சண்ட் – ஷைலா தம்பதியின் மகள் தான் ராதிகா மெர்ச்சண்ட். நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ராதிகா Encore Healthcare இயக்குனராக உள்ளார். ஆனந்த் அம்பானி சிறுவயதிலிருந்தே ராதிகா மெர்ச்சண்டுடன் பழகி வருகிறார். ராதிகா நியூயார்க்கில் தனது படிப்பை முடித்துவிட்டு 2017ம் ஆண்டு மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சிறிது காலம் வேலை செய்தார். ராதிகா தந்தை வீரேனின் சொத்து மதிப்பு ரூ. 755 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பரத நாட்டியத்தின் மீது ஆர்வம் கொண்ட ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக குரு பாவனா என்பவரிடம் பரத நாட்டியம் பயிற்சி மேற்கொண்டார். பரத பயிற்சி முடிந்தவுடன் ராதிகாவின் அரங்கேற்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெகு விமரிசையாக நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.