கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 276 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராணுவ படை 1,500 பேரை காப்பாற்றியது. பெருக்கெடுத்த ஆறுகளின் மீது சிறிய தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டன, மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பேரிடரில் தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
என்டிஆர்எப் மற்றும் எஸ் டி ஆர் எஃப் குழுவினர் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்படும் காட்சி காண்போரை இதயத்தை கணக்க செய்துள்ளது. இந்த நிலையில், மேப்பாடி பகுதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ்கள், ராணுவ மருத்துவ வாகனம், ஏராளமான தன்னார்வலர்கள், கிரேன், உட்பட அனைத்து வாகனங்களும் அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.
சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவில் 8 முதல் 10 ஆம்புலன்ஸ்கள் செல்கிறது. ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் மக்கள் நின்று இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர். அதனைத்தொடர்ந்து, பேரிடர் குறித்து முதல்வர் பினராயி விஜயன் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறார். மாவட்டத்தில் முகாமிட்டுள்ள மாநில அமைச்சர்கள், வயநாடு எம் எல் ஏ-க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read more ; சென்னையில் தொழில் வரி உயர்வு… எப்பொழுது நடைமுறைக்கு வரும்…? மாநகராட்சி விளக்கம்