fbpx

Ameer | அமீர் தலையில் இடியை இறக்கிய ஈஸ்வரன்..!! இது என்னடா புது பிரச்சனையா இருக்கு..!!

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நிலையில், இயக்குநர் அமீருக்கும் சம்பந்தம் இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. யாரும் கேட்கும் முன்பாகவே தனக்கும் ஜாபர் சாதிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தயாரிப்பில் உருவாகி வரும் இறைவன் பெரியவன் படத்திலும் இனிமேல் தொடர போவதில்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். மேலும், விசாரணைக்கு அழைத்தாலும் வரத் தயாராகவே உள்ளேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், அடுத்த பிரச்சனை அமீர் தலைக்கு வந்திருக்கிறது. ஜாபர் சாதிக் பிரச்சனைக்கு முன்பாகவே ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் இடையே ஒரு பஞ்சாயத்து பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. பருத்தி வீரன் படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்கியிருந்தார். அந்த படத்தில் இருந்தே இருவருக்கும் பிரச்சனை வெடித்தது. இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் மூலம் அமீர் கொடுத்த பேட்டி ஒன்றில், ஞானவேல் ராஜாவின் அப்பா வி.கே. ஈஸ்வரன் குறித்து அமீர் அவதூறாக பேசியதாக தற்போது அமீர் மீது மான நஷ்ட வழக்கை வி.கே. ஈஸ்வரன் தொடுத்துள்ளார்.

நடிகர் சிவகுமாரின் மகன் கார்த்தி பருத்தி வீரன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை இயக்கிய அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ள நிலையில், தற்போது மான நஷ்ட வழக்கு அவர் மீது பாய்ந்துள்ளது.

Read More : 20 Rupee Note | உங்கக்கிட்ட இந்த ரூ.20 நோட்டு இருக்கா..? அப்படினா நீங்களும் லட்சாதிபதிதான்..!!

Chella

Next Post

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.40,000 வரை ஊதியம்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Wed Mar 13 , 2024
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 517 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.40,000 […]

You May Like