fbpx

கவனம்…! திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம்…! ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்…! காவல்துறை அதிரடி…!

சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் 12,625 வழக்குகளுக்குண்டான அபராத தொகை 70,46,196 ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாக 8,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 42,78,808 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பின்னால் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 4,728 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 லட்சத்து 2 ஆயிரத்து 618 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,009 வழக்குபதிவு செய்யப்பட்டு 67 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1000 ரூபாயும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் 1,000 ரூபாயும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் 10,000 ரூபாயும், பைக் ரேஸில் ஈடுபடுவோருக்கு 5,000 ரூபாயும் அபராதமாகப் போக்குவரத்து காவல்துறையினர் வசூல் செய்து வருகின்றனர்.

Vignesh

Next Post

#Holiday: வரும் 8-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை...! இந்த மாநிலத்தில் மட்டும்தான்...! முழு விவரம் இதோ....

Sun Nov 6 , 2022
நாடு முழுவதும் நாளை மறுநாள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி திரிபுரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, சிக்கிம், அசாம், மணிப்பூர், கேரளா, கோவா, பீகார், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குருநானக் ஜெயந்தி, குர்புரப் என்றும் அழைக்கப்படுகிறது, இது சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாகும். முதல் […]

You May Like