fbpx

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் சூரி… இணையத்தில் வைரலாகும் புடைப்படங்கள்…

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் சூரி, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புடைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து, குள்ளநரி கூட்டம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், தேசிங்கு ராஜா என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாகவும்  நடித்திருந்தார்.  ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  தற்போது இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருடன்’ படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகஸ் நகருக்கு சென்றுள்ள இவர், அங்கு கூலிங் கிளாஸ் போட்டப்படி கால் மேல் கால் போட்டு சோபாவில் அமர்ந்து நகரின் அழகை ரசிக்கும் படியான  புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

read more..ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பிசிசிஐ நிதி உதவி..!!

English Summary

actor soori -america visit.. shares photos viral

Next Post

Vedio Viral | 3-வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்!! என்ன பெயர் தெரியுமா?

Mon Jul 15 , 2024
Sivakarthikeyan has announced the name of the child through a video on X site while the information that Sivakarthikeyan is going to welcome the third child has been shared virally

You May Like