fbpx

திடீரென இந்தியா மீது குண்டை தூக்கிப்போட்ட அமெரிக்கா..!! என்ன இப்படி சொல்லிட்டாரு..!!

பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ் அமைப்பு, கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரல் ராணுவம் தற்போது வரை காசா நகர் மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா நேரடி ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்து, அங்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும் என உறுதியளித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அண்மையில் ஹமாஸ் தாக்குதல் தொடர்பாக முக்கிய தகவலை அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதாவது, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த காரணம் இந்தியா – ஐரோப்பா இடையேயான சரக்கு போக்குவரத்து திட்டம் தான் என கூறியுள்ளார்.

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா முதல் ஐரோப்பா வரையில் , இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் இந்த சரக்கு போக்குவரத்து பாதை அமைக்கப்பட திட்டம் வகுக்கப்பட்டது. இந்த சரக்கு போக்குவரத்து பாதையானது சீனா, பாகிஸ்தான், ஈரான் என செல்லும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்திற்கு மாற்றாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தான், ஈரானின் தூண்டுதலின் பெயரில் ஹமாஸ் அமைப்பினர், இந்தியா – ஐரோப்பா இடையேயான சரக்கு போக்குவரத்து திட்டமான IMEECவில் முக்கிய அங்கமாக இருக்கும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தபடுகிறது என அதிர்ச்சி தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Chella

Next Post

பட்டப்பகலில் பயங்கரம்..!! கதவை திறந்ததும் சரமாரி வெட்டு..!! சரிந்து விழுந்த திமுக பிரமுகர்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

Thu Oct 26 , 2023
சென்னை திருவொற்றியூரை அடுத்த விம்கோநகர் பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் விவேகானந்தன். இவரது மகன் காமராஜ். இருவரும் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வழக்கம் போல காமராஜ் இன்று அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்தின் உள்ளேயே புகுந்து காமராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். உடனே ரத்த […]

You May Like