fbpx

உலகின் மிக நீளமான நாக்கை கொண்ட அமெரிக்கர்!… ஜெங்கா விளையாடி கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்!…

உலகின் மிக நீளமான நாக்கை கொண்ட அமெரிக்காவை சேர்ந்த நபர், ஜெங்கா பிளாக் விளையாடி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

பொதுவாக ஆண் ஒருவரது நாக்கின் நீளம் சராசரியாக 7.9 செ.மீ. தான் இருக்கும். பெண்களுக்கு சராசரியாக 8.5 செ.மீ. அளவில்தான் நாக்கு இருக்கும். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு சராசரி அளவைவிட 2 செ.மீ. நீளமாக உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாலினாஸ் நகரைச் சேர்ந்தவர் நிக் ஸ்டோபெர்ல். இவரின் நாக்கு 10.1 சென்டிமீட்டர்கள் நீளம் கொண்டது. இந்தநிலையில், நிக் ஸ்டோபெர்ல், ஜெங்கா விளையாட்டில் உள்ள 5 பிளாக்குகளை தன் நாக்கைக் கொண்டு 55.526 வினாடிகளில் நகர்த்தி கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.

மேலும் நிக் ஸ்டோபெர்ல், தனது நாக்கை வைத்து ஓவியம் வரைவது உள்ளிட்ட பல வித்தைகளை செய்துவருகிறார். ஒரு நிமிடத்தில் அதிக முறை நாக்கால் மூக்கைத் தொடும் சாதனையை முறியடிக்க நிக் முயற்சி செய்தார். ஏற்கெனவே ஒருவர் ஒரு நிமிடத்திற்குள் 281 முறைக்கு நாக்கால் மூக்கைத் தொட்டு கின்னஸ் உலக சாதனை படைத்து இருக்கிறார். அதை முறியடிக்கும் முயற்சியில் இறங்கிய நிக் 246 முறை மட்டுமே நாக்கால் மூக்கைத் தொட முடிந்தது. மேலும், நீளமான நாக்கால் உணவுப் பொருட்கள் எதையும் சிறப்பாக ருசி பார்க்க முடியவில்லை. ஆனால், சுத்தமாக இருப்பதற்கு நீளமான நாக்கு உதவுகிறது.”நான் சாப்பிடும்போது என் முகத்தில் ஏதாவது ஒரு உணவுத் துணுக்கு ஒட்டிக்கொண்டால் நான் அதை நக்கி எடுத்துவிட முடியும்” என்று நிக் ஸ்டோபெர்ல் கூறுகிறார்.

Kokila

Next Post

மாசு பரிசோதனை மையம் மூலம் ஒரு நாளைக்கு ரூ. 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா..?

Sun Mar 19 , 2023
மோட்டார் வாகனச் சட்டம் 2019ன் கீழ், கார் உரிமையாளர்கள் தங்கள் காப்பீட்டைப் புதுப்பித்து, வழக்கமான மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழைப் பெற வேண்டும்.. இல்லை எனில் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.. புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019ன் படி, பியுசி சான்றிதழைப் பெறத் தவறினால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.. எனவே வாகன ஓட்டிகள் பியுசி மையத்தில் தடையில்லா சான்றிதழை பெற வேண்டும்.. இந்த கடுமையான மோட்டார் வாகன விதிமுறைகள் ஒரு […]

You May Like