அமெரிக்காவை சேர்ந்த பெண்ணின் கண்களில் 23 கான்டக்ட் லென்சுகள் இருந்தது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த லென்ஸ்களை கண்களில் இருந்து நீக்கிய மருத்துவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ளார். அதில் அனைவரிடமும் கண்களில் லென்சுடன் இரவில் தூங்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
அந்த பெண் 23 நாட்கள் அன்றாடம் சோர்வில் வந்து கண்களில் இருக்கும் லென்ஸ்களை அகற்றாமல் அப்படியே உறங்கி விடுவார், மறுநாள் மீண்டும் புதிய காண்டாக்ட் லென்ஸை கண்களில் வைத்துள்ளார்.
இப்படி தொடர்ந்து 23 நாட்கள் நடைபெற்ற நிலையில், அவரது கண் இமைகளுக்கு கீழ் ஒன்றன்பின் ஒன்றாக லென்ஸ்கள் சேர்ந்து விட்டது. இதில் நீல நிறத்தில் இருக்கும் ஒரு லென்ஸை அவர் பயன்படுத்திய போது அதில் இருக்கும் வேதிப்பொருள் அவரது கண்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால், அனைத்து லென்ஸ்களும் பச்சை நிறமாக மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்து. அந்தப் பெண் மருத்துவமனைக்கு சென்று அனைத்து லென்ஸ்க்களையும் எடுத்ததாக கூறப்படுகிறது.