அமெரிக்காவில் எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமலேயே இளைஞர் ஒருவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் கைலே என்ற இளைஞர். 31 வயதான இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. எந்த பெண்ணுடனும் உறவு கொண்டது இல்லை ஆனாலும் அவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். இரத்த தானம், உடல் உறுப்புகள் தானம் போல், கைலே விந்தணு தானம் செய்வதை பொழுது போக்காக செய்துவருகிறார். விந்தணு தானம் என்பது கருவுறாத தம்பதிகள் அல்லது ஒரு தனிநபருக்கு ஒரு குழந்தையை கருத்தரிக்க உதவுவதற்காக ஒரு வளமான ஆண் தனது விந்துவை கொடுப்பது தானம் செய்வதாகும். அதாவது குழந்தை பேறு பெற முடியாத தம்பதிகளுக்கு இவர் விந்தணு தானம் செய்வதாக கூறுகிறார்.
இதற்காக ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் போன்ற பல்வேறு நாடுகளுக்கு சென்று விந்தணு தானம் செய்து வரும் இவர், அடுத்து 14 குழந்தைகளுக்கும் தந்தையாகப் போகிறார். பிறருக்கு உதவும் எண்ணாம் கொண்ட தனக்கு பாலியல் வாழ்க்கை என்பது வெறும் கனவாகிப் போன விஷயம் என வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். தனது இந்த செயலுக்காக எந்தவிதமான தொகையையும் பெற விரும்பாத கைலே, தன்னை ஏற்றுக்கொண்டு ஒரு பெண் வருவாரேயானால் அன்புடன் அவரை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.