fbpx

பெங்களூர் ரோடு ஷோ-வில் பங்கேற்கும் அமித்ஷா

மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பெங்களூரில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

கர்நாடகாவில் 14 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி, தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் பிரதமர் மோடி இரண்டு முறை பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று பெங்களூரில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக நேற்று இரவு பெங்களூரு வந்த அமித்ஷா, இன்று பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான ஜனதா தளம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து சிக்கபள்ளாப்பூர், தும்கூர், தாவாங்கேரே, சித்ரதுர்கா, பிதார், பெல்காம் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளின் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் பெங்களூரு ஊரக பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சன்னப்பட்டிணத்தில் அமித்ஷா ரோடு ஷோவில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். அமித்ஷாவுடன் ஜனதா தளம் மாநில தலைவர் குமாரசாமியும் பங்கேற்கவுள்ளார்.

கடந்த தேர்தலில் பெங்களூரு ஊரக தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. இதையடுத்து இம்முறை முதல் வெற்றி இங்கிருந்து தொடங்கவேண்டும் என்ற அடிப்படையில் அமித்ஷா தனது பிரசாரத்தை கிராமப்புறங்களில் இருந்து தொடங்குவதாக பா.ஜ.க. நிர்வாகிகள் கூறினர்

Next Post

Vijay | விஜய்யின் கடைசி படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்..!! முழுக்க முழுக்க அரசியல் படம்..!!

Tue Apr 2 , 2024
நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் அரசியலுக்கு வருவதையும் அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். நீண்ட காலமாக விஜய்க்கு அரசியல் திட்டம் உள்ளதை அறிந்தவர்கள், அவருடைய திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அரசியல் அறிவிப்புடன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்பதையும் விஜய் அறிவித்திருந்தார். இறுதியாக, விஜய் […]

You May Like