மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வர திட்டமிட்டு இருந்தார், நான்கு தொகுதிகளில் ரோட் ஷோ மற்றும் ஒரு தொகுதிகளில் பொதுக் கூட்டத்தில் பேச இருந்தார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அமித் ஷாவின் தமிழ்நாட்டு விஜயம், மாநிலத்தின் அரசியல் நிலப்பரப்பில் வியூக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
அமித்ஷா இன்று பிற்பகல் தேனி நகரில் ரோடு ஷோ மூலம் தனது பிரச்சாரத்தைத் தொடங்க இருந்தார், பின்னர் மாலை மதுரையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறவு காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக சுற்றுப்பயண் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இன்றும், நாளையும், அமித் ஷா கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அமித் ஷாவின் தமிழக தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் எப்போது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தமிழகத்தின் அனைத்து 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.