fbpx

பெரும் விபத்தில் சிக்கிய அமிதாப் பச்சன்..!! எலும்பு முறிந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

நடிகர் அமிதாப் பச்சன் 80 வயதிலும் ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர், தற்போது பிரபாஸ் நடித்து வரும் Project K படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹிந்தி நடிகை தீபிகா படுகோனும் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் Project K படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது திடீரென நடந்த விபத்தில் அமிதாப் பச்சன் படுகாயம் அடைந்து இருக்கிறார்.

“ஒரு ஆக்ஷன் காட்சியில் நடிக்கும் போது எனக்கு காயம் ஏற்பட்டது. விலா பகுதியில் தசை கிழிவு மற்றும் rib cartilage உடைந்து இருக்கிறது. ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பெற்று மும்பைக்கு திரும்பி இருக்கிறேன். ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார்கள்.” “ஆம், மூச்சு விடும்போதும் நகரும்போதும் வலி அதிகம் இருக்கிறது. சரியாக பல வாரங்கள் ஆகலாம். வலி குறைய மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்” என அமிதாப் அந்த விபத்து குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.

Chella

Next Post

மெரினாவில் கரை ஒதுங்கிய உடல்..!! உடனே தடை செய்யுங்கள்..!! சிக்கியது பரபரப்பு கடிதம்..!!

Mon Mar 6 , 2023
சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர், பிரிண்டர் மற்றும் ஜெராக்ஸ் எந்திரங்களுக்கு மை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வெளியே சென்ற சுரேஷ், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராதா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷை தேடி வந்தனர். ‘அப்பொழுது மனைவி […]

You May Like