fbpx

அம்மனுக்கு ஆடி மாதத்தில் கூழ் ஊற்றி வழிபட இதுதான் காரணமா?

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் செய்து வழிபாடு செய்வதற்கான காரணங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. குறிப்பாக, கூழ் வார்ப்பதற்கு மிகவும் விசேஷமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. ஆடி மாத அம்மன் பிரசாதங்களில் மிக முக்கியமான இந்த கூழ், உடலையும் வயிற்றையும் குளிர்ச்சிப்படுத்த சிறந்த உணவாகும்.

மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் எங்கு பார்த்தாலும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்க அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறுகிறது.

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி முனிவரை, பொறாமை காரணமாக கார்த்த வீரியார்ச்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி, துக்கம் தாங்க முடியாமல் தன்னுடைய உயிரை விட முடிவு செய்கிறார். பின்னர், தீயை மூட்டி அதில் ரேணுகாதேவி இறங்கினார். அப்போது, இந்திரன் மழை பொழியச் செய்து தீயை அணைத்தக்க கூறப்படுகிறது. இருப்பினும் தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. மேலும், வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து ஆடையாக அணிந்து கொண்டார். பின்னர் பசியைப் போக்கிக் கொள்ள அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டபோது,  மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாகக் கொடுத்தனர். அதைக் கொண்டு கூழ் தயாரித்து சாப்பிட்டார், ரேணுகாதேவி.

அப்போது, அவருக்கு  முன்பாக தோன்றி சிவபெருமான், “உலக மக்களின் அம்மை நோய் நீங்க, நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும் மற்றும்  இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும்” என்று வரம் அளித்தார்.

இந்தச் சம்பவத்தை நினைவு கூரும் வகையில், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வர்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படையல் வைத்து, எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடுவதுடன், அம்மனுக்கு படைத்த கூழை பக்தர்களுக்கு வழங்கி அன்னையின் மனம் குளிர அருள் தருவாள் என்பது ஐதீகமாக கொண்டுள்ளனர்.

எனவே ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைப்பதாக வேண்டிக்கொண்டு, பக்தர்கள் கூழ் படைகின்றனர். பின்னர் அதனை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து  மகிழ்கின்றனர்.

read more.. பட்டா வழங்க லஞ்சம் வாங்குவோர் இனி தப்பிக்க முடியாது..!! வந்தது சூப்பர் அறிவிப்பு

English Summary

amman adi special food.. festival

Next Post

வீட்டில் கற்றாழை செடியை தவறான திசையில் வைத்தால் கஷ்டம் வரும்...  இப்படி வைத்தால் ஆபத்து வராம தடுக்கலாம்..

Mon Jul 15 , 2024
aloe vera - plantaion - -method-in-home-planted-wrong-uproot

You May Like