fbpx

அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொழிற்சாலையை மூட தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் திடீரென அமோனியம் வாயு கசிந்தது. இதனால் உள்ள மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பதற்றம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. பின்னர், தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து தனியார் உர தொழிற்சாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றிரவு 11.30 மணியளவில் அமோனியா இறக்கும் பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. தற்போது அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அமோனியா வாயு கசிவினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Chella

Next Post

ரஜினி அரசியல்..!! மனம் திறந்த மனைவி லதா..!! என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..!!

Wed Dec 27 , 2023
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது, நீதிமன்றத்திற்கு சென்றபோது தலையில் முக்காடு போட்டு சென்றது உள்ளிட்டப் பல விஷயங்கள் குறித்து பேசினார். ‘கோச்சடையான்’ திரைப்பட வழக்கில் லதா ரஜினிகாந்த் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நான் மோசடி எதுவும் செய்யவில்லை. நான் செலிப்பிரிட்டியா இருப்பதாக அவர்கள் வன்மத்துடன் எனக்கு தொல்லை […]

You May Like