fbpx

#Bigg boss : சக பெண் போட்டியாளர்கள் குளிக்கும் இடத்தில் அமுதவாணன் செய்த செயல்..!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இந்த வருடத்தின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

போட்டியாளர்களில் ஒருவரான அமுதவாணன் என்பவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் பிரபலமானவராக இருந்தவர்.

இதனையடுத்து பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ என்ற திரை படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிக் பாஸில் இவரின் செயலை பார்த்து ரசிகர்கள் இவர் மீது பெரும் கடுப்பில் உள்ளார்கள். அதற்கான காரணம் இவர் மைக்கை கழட்டி வைத்து விட்டு பெண் போட்டியாளர்கள் குளிக்கும் போது பாத்ரூம் கதவில் உள்ள இடுக்கின் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.

இதனை கணித்து கொண்டு இருந்த பிக்பாஸ் மைக்கை மாட்டுங்கள் அமுதவாணன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு உடனே பதறிய அமுதவாணன் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ பதிவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் உடனடியாக இவரை ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கருத்துகளை வீசி வருகின்றனர்.

Rupa

Next Post

#திண்டுக்கல்: மனித கம்ப்யூட்டர் என இந்தியா வெர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்த மூன்றாம் வகுப்பு மாணவன்..! 

Sun Nov 27 , 2022
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள பழனி அக்ஷயா அகாடமி என்ற பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்ற எட்டு வயது சிறுவன் அபினவ் என்பவர். இந்த சிறுவன் கால்குலேட்டரையே ஓரம் கட்டும் அளவிற்கு கணிதத்தில் சாதனை படைத்து வருகிறான். ஓரிலக்க மற்றும் ஈரிலக்க எண்களின் தொடர்ச்சியாக கூட்டுதல், பெருக்குதல், மடங்குகள், வர்க்கம், கண எண்கள், பிதாகரஸ் எண்களுக்கிடையே இருக்கும் தொடர்பை காணுதல் என கால்குலேட்டருக்கு இணையான வேகத்தில் அச்சிறுவன் கணிதத்தில் […]

You May Like