1960 களிலிருந்து அமுல் நிறுவனம் என்றால் இந்தியாவை பொருத்தவரையில் தெரியாத ஆட்களே கிடையாது. இந்த நிறுவனம் குஜராத்தில் இருந்து செயல்படுகிறது குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தையும் தரமான முறையில் தயாரித்து வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.
அந்த அளவிற்கு குழந்தைகளின் உணவுப் பொருட்களில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு பொருட்களையும் கவனமாக தயாரித்து வழங்கி வருகிறது அமுல் நிறுவனம்.
ஆனால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட புதிதில் இந்த நிறுவனத்தை பிரபலமாக்க இந்த நிறுவனத்தின் தலைமை ஒரு லோகோவை உருவாக்க முடிவு செய்தது.
அதன்படி முதன்முதலாக அமுல் பெண் என்ற சின்னம் உருவாக்கப்பட்டது. அதாவது, நீல நிற முடி, புள்ளிகள் வைத்த ஆடை, குறும்புத்தனமான சிரிப்புடன் கூடிய ஒரு குழந்தை முதன்முதலாக மும்பை நகரின் விளம்பர பலகைகளில் தோன்றியது.
பின்னர் இந்த லோகோ அமுல் நிறுவனத்தில் முக்கிய இடத்தை பிடித்தது. குஜராத்தில் இருந்து செயல்பட்டு வரும் அமுல் நிறுவனம் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது என்றால் அதற்கு இந்த லோகோவும் உறுதுணையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த லோகோவை உருவாக்கியவர் சில்வெஸ்டர் டகுன்ஹா. இவர் கடந்த 20 ஆம் தேதி இரவு மும்பையில் மரணமடைந்ததாக அமுல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அவருடைய மரணத்திற்கு பலரும் தங்களுடைய அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்து இருக்கிறார்கள்.