fbpx

2 வயது சகோதரனின் உடலுடன் சாலையில் அமர்ந்திருந்த 8 வயது சிறுவன்… ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் நடந்த அவலம்..

மத்திய பிரதேசத்தின் அம்பாவின் பத்ரா கிராமத்தில் புஜாராம் என்பவர் வசித்து வருகிறார்.. இவருக்கு 8 வயதில் குல்ஷன் என்ற மகனும், 2 வயதில் ராஜா என்ற மகனும் உள்ளனர்.. இந்நிலையில் இரண்டு வயது மகன் ராஜாவின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. ஆரம்பத்தில், ஜாதவ் தனது மகனை வீட்டிலேயே குணப்படுத்த முயற்சித்தார், ஆனால் ராஜாவுக்கு தாங்க முடியாத வயிற்று வலி இருந்ததால், குழந்தையை மொரீனா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவருடன் மூத்த மகன் குல்ஷனும் மருத்துவமனைக்குச் சென்றார்.

எனினும், மொரீனா மாவட்ட மருத்துவமனையில் ராஜா உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.. குழந்தையின் உடலை தனது கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை அதிகாரிகளிடம் கெஞ்சினார், ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மருத்துவமனை அதிகாரிகளால் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், அந்த நபர் தனது குழந்தையின் சடலத்துடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து சாலையில் அமர்ந்தார். எந்த வாகனத்தையும் காணவில்லை, வெளியில் ஒரு வாகனத்தை செலுத்த போதுமான பணம் இல்லை.

குல்ஷன் தன் இறந்த சகோதரனின் உடலை மடியில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து, பூஜாராம் ஜாதவ் வீட்டிற்குச் செல்லும்படி சொன்னார்கள்.

இதுகுறித்து பேசிய பூஜாராம் ஜாதவ், “குழந்தையின் தாய் வீட்டில் இல்லை. நான் ஒரு ஏழை, என் குழந்தை என்ன சாப்பிட்டது என்று தெரியவில்லை, என் குழந்தை என்ன சாப்பிட்டது, அவரது உடல்நிலை மோசமடைந்தது. நான் மருத்துவரை அணுகியபோது, ​​​​ராஜாவை கொண்டு வர சொன்னார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வாகனத்திற்கு பணம் செலுத்தும்படி என்னிடம் கேட்டனர்..” என்று தெரிவித்தார்..

இதற்கிடையில், மொரேனா சிவில் சர்ஜன் வினோத் குப்தா, “நாங்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தோம். வாகனம் வருவதற்குள், குழந்தையின் தந்தை சென்றுவிட்டார்” என்றார்.

Maha

Next Post

1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம்... 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற் பழகுனர் மேளா...!

Mon Jul 11 , 2022
இந்தியா முழுவதும் இன்று பிரதமரின் தேசிய தொழிற் பழகுனர் மேளா நடத்தப்பட உள்ளது. இது குறித்து மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் செய்முறைப் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக,  இன்று, மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், பிரதமரின் தேசிய தொழிற் பழகுனர் மேளாவை நடத்த உள்ளது.   இதுவரை,  1,88,410 […]

You May Like