fbpx

3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் : அனைத்து பயிற்சி மையங்களையும் மூட அதிரடி உத்தரவு!

டெல்லியில் இயங்கி வரும் அனைத்து பயிற்சி மையங்களையும் மூட மேயர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய டெல்லியின் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சிக்கி யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தலைநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, கனமழையின் போது வடிகால் உடைந்து வெள்ளம் ஏற்பட்டு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மழை நீர் தேங்கிய டெல்லியில் யுபிஎஸ்சி விண்ணப்பதாரர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, டெல்லியில் உள்ள அனைத்து தேர்வு பயிற்சி மையங்களையும், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்டிடங்களின் அடித்தளங்களை ஆய்வு செய்ய டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிமுறைகளை மீறி இயங்கும் வணிக கட்டடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகளின் கவனக் குறைவால் சம்பவம் நடந்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், ஐஏஎஸ் பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பயிற்சி நிறுவனம் கட்டட நிர்வாகம் மற்றும் வடிகால் பராமரிப்பு பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more ; இஸ்‌ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் மீது ராக்கெட் தாக்குதல்..!! இதுவரை 10 பேர் பலி..

English Summary

An action order has been issued to close all the training centers operating in Delhi.

Next Post

இந்தியாவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது..!! - ஆய்வில் தகவல்

Sun Jul 28 , 2024
A recent study by a Delhi-based NGO highlighted that at least 26 per cent of cancer patients in India have head and neck cancer.

You May Like