fbpx

டெல்லியில் இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்!… நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி அழைப்பு!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11:30 மணிக்கு டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்.1-ம் தேதி தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவரின் உரையுடன் கூடவுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் இறுதி பட்ஜெட் இதுவாகும். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இது இடைக்கால பட்ஜெட்டாக கருதப்படுகிறது.

தேர்தலுக்கு பின்னர் அமையும் அரசு சார்பில் வரும் ஜூலை மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாடாளுமன்ற கூட்டத்துக்கு முன்னர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது வழக்கம். அதன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று கூட்டியுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப். 9ம் தேதி வரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு அலுவல்களின் அவசரங்களுக்கு உட்பட்டு விரைவாக நிறைவடையவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், இடைக்கால பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெண் விவசாயிகளுக்கான பிரதமர் விவசாய நிதியை இரட்டிப்பாக்க இடைக்கால பட்ஜெட்டில் முன்மொழியப்படும் என தெரிகிறது. இதன் மூலம், அரசுக்கு ரூ.12,000 கோடி கூடுதல் செலவாகும் என கூறப்படுகிறது.

Kokila

Next Post

பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்...! இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை...!

Tue Jan 30 , 2024
இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா […]

You May Like