மதுரையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் என்பது தேவையில்லை.
பணியிடங்கள் : மொத்தம் 5 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Node.js Developer Trainee, React.js Developer Trainee, Flutter Developer Trainee, PHP Laravel Developer Trainee, DevOps Engineer Trainee உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
என்னென்ன தகுதி? இந்த பணியை பெற விரும்புவோர் 2021-2024ம் ஆண்டுக்குள் டிகிரி படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். அதேபோல் டெக்னிக்கல் ஸ்கில்ஸாக Node.js / React.js / Flutter / PHP / AWS என்பது தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Written Test – Aptitude, Technical தேர்வை எதிர்கொள்ள வேண்டாம். டெக்னிக்கல் இண்டர்வியூ என்பது Face-to-face முறையில் நிறுவனத்தின் டெக்னிக்கல் டீமை சேர்ந்தவர்கள் நடத்துவார்கள். இறுதி இண்டர்வியூ என்பது டெக்னிக்கல் ஹெட் மூலம் நடத்தப்படும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://lnkd.in/eg76s2ER மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய மார்ச் 12ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் கே புதூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். வாரம் 5 நாட்கள் பணி என்பது இருக்கும். 2 நாட்கள் வார விடுமுறை வழங்கப்பட உள்ளது. பணிக்கு தர்வாகும் நபர்கள் மதுரை அலுவலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் வகையில் இடம்பெயர வேண்டியிருக்கும்.
Read more: மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியால் அவதிப்படுறீங்களா..? இந்த டிப்ஸ் கண்டிப்பாக உங்களுக்கு உதவும்..!!