தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
இயன்முறை மருத்துவர் – 1
பேச்சு சிகிச்சையாளர் – 1
உளவியலாளர் – 1
கண் நிபுணர் – 1
ஆரம்ப நிலை பயிற்சி மற்றும் சிறப்பு கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் – 1
ஆடியோமெட்ரிசியன் – 1
இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்றுவிப்பாளர் (பேச்சு சிசிச்சையாளர்) – 1
நடத்தை ஆய்வுக்கான சிறப்பு கல்வியாளர் – 1
வயது வரம்பு: காஞ்சிபுரத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு 16.12.2024 தேதியின்படி, விண்ணப்பதார்கள் அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி:
* இயன்முறை மருத்துவர் பிசியோதெரபிஸ்ட் பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* பேச்சு சிகிச்சையாளர் பதவிக்கு தற்கான பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* உளவியலாளர் பதவிக்கு உளவியலில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* கண் நிபுணர் பதவிக்கு அதற்கான இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* ஆரம்ப நிலை பயிற்சி மற்றும் சிறப்பு கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் பதவிக்கு துறை சார்ந்த பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* ஆடியோமெட்ரிசியன் பதவிக்கு அதற்கான டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்றுவிப்பாளர் (பேச்சு சிசிச்சையாளர்) பதவிக்கு அதற்கான இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* நடத்தை ஆய்வுக்கான சிறப்பு கல்வியாளர் பதவிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- இயன்முறை மருத்துவர் பதவிக்கு ரூ.13,000 சம்பளம் வழங்கப்படும்.
- பேச்சு சிகிச்சையாளர் பதவிக்கு ரூ.23,000 வழங்கப்படும்.
- உளவியலாளர் பதவிக்கு ரூ.23,000 வழங்கப்படும்.
- கண் நிபுணர் பதவிக்கு ரூ.14,000 வழங்கப்படும்.
- ஆரம்ப நிலை பயிற்சி மற்றும் சிறப்பு கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் பதவிக்கு ரூ.17,000 வழங்கப்படும்.
- ஆடியோமெட்ரிசியன் பதவிக்கு ரூ.17,250 வழங்கப்படும்.
- இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்றுவிப்பாளர் (பேச்சு சிசிச்சையாளர்) பதவிக்கு ரூ.17,000 வழங்கப்படும்.
- நடத்தை ஆய்வுக்கான சிறப்பு கல்வியாளர் பதவிக்கு ரூ.23,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது. பணியில் சேருவதற்கான நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501.