fbpx

உல்லாசத்தின்போது வந்த யோசனை..!! உடனே களத்தில் இறங்கிய கறிக்கடை உரிமையாளர்..!! காரியம் முடிந்தவுடன் கசமுசா..!!

சென்னை புறநகரில் பகுதியில் பம்மல் ஆதாம் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சின்னப்பொன்னன் (80). இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், தனது வீட்டின் அருகே இருந்த ஆடுகள் திடீரென மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, சந்தேகமடைந்த சின்னப்பொன்னன், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், சிவப்பு நிற காரில் வந்த பெண் உள்பட 2 பேர் ஆடுகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சிசிடிவி ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்தார்.

உல்லாசத்தின்போது வந்த யோசனை..!! உடனே களத்தில் இறங்கிய கறிக்கடை உரிமையாளர்..!! காரியம் முடிந்தவுடன் கசமுசா..!!

இதற்கிடையே, மீதமுள்ள ஆடுகளையும் திருடுவதற்காக அந்த கும்பல், கடந்த சில நாட்களுக்கு முன் சின்னப்பொன்னன் வீட்டிற்கு வந்துள்ளது. ஆனால், அந்த சமயத்தில் சின்னப்பொன்னன் கத்தி கூச்சலிடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனையடுத்து, கார் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, அனகாபுத்தூரில் உள்ள மெக்கானிக் கடையில் ஆடு திருடி சென்ற கார் நின்றிருந்தது. இந்த கார் குறித்து விசாரித்த போது அனகாபுத்தூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும், அவர் தாம்பரம் அடுத்த முடிச்சூரை சேர்ந்த சரோஜினி என்ற பெண்ணுடன் இணைந்து ஆடுகளை திருடியதும் அவற்றை மதுரவாயல் கறிக்கடை உரிமையாளர் பாரூக் என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, ஜெயக்குமார், கறிக்கடை உரிமையாளர், சரோஜினி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரவாயல் பகுதியில் கறிக்கடை வைத்திருக்கும் பாரூக் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, சரோஜினியுடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் உல்லாசமாக அனுபவித்து வந்துள்ளார். அப்போது தான் சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பரூக் கொடுத்த ஐடியா பேரில் சரோஜினி இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றதத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Chella

Next Post

#சென்னை: அண்ணியுடன் அந்தரங்கமாக இருந்த நபரை அடித்து கொலை செய்த கொழுந்தன்..! 

Fri Jan 13 , 2023
சென்னை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் தொழிலாளியான மணிகண்டன் (40) எனபவர் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் வழக்கம் போல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அச்சமயத்தில், ​​கணவரின் தம்பியான வேலு திடீரென அங்கு சென்றுள்ளார். அப்போது அண்ணி மணிகண்டனுடன் நெருக்கமாக […]

You May Like