fbpx

தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் இண்டிகோ விமானம்..!! மதுரையில் பரபரப்பு..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகிறது.

தொடர் மழையால் மதுரை மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வானம் கடுமையாக மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது. மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்த தனியார் விமானம், மதுரை விமான நிலையம் அருகே உள்ள விராதனூர் மற்றும் திருமங்கலம் பகுதியில் வானிலை வட்டமடித்து வந்தது.

இதனிடையே வானிலை சீராகும் வரை காத்திருக்கும் வகையில் வட்டமடித்து வரும் விமானம், வானிலை சரியாகாத சூழ்நிலை ஏற்பட்டால், வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. வானிலை சரியானால் மட்டுமே மதுரையில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில. ஒரு வேளை திருப்பிவிடப்பட்டால்., அனேகமாக திருச்சி அல்லது தூத்துக்குடி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more : பொங்கல் பண்டிகை அன்று CA தேர்வா? வலுத்த கண்டனங்கள்.. தேதியை மாற்றிய மத்திய அரசு..!!

English Summary

An IndiGo flight from Telangana’s Hyderabad to Madurai this morning failed to land and is circling in the sky.

Next Post

கனமழை எதிரொலி..!! டெல்டா மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காதா..? தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன..?

Tue Nov 26 , 2024
The Tamil Nadu government's fact-finding committee has provided clarification on whether buses will stop operating due to heavy rains in the Delta districts.

You May Like