fbpx

10 வருட காதல்.. மனம் திறந்த சாய்பல்லவி!! விரைவில் டும்..டும்..டும்

நடிகை சாய் பல்லவி, தனது காதல் வாழ்க்கை குறித்து கொடுத்துள்ள ஒரு பேட்டி தற்பாேது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் என தென்னகத்தின் தேவதையாக வலம் வந்த சாய் பல்லவி இன்று இந்தியாவே கொண்டாடும் நடிகையாக உருவெடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் மாடலிங் செய்த சாய் பல்லவியை ஒரு விளம்பரத்தில் பார்த்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய பிரேமம் படத்தின் மூலம் அவரை ஹீரோயினாக அறிமுகம் செய்தார்.

திரையுலகில் இருக்கும் நடிகைகள் பலரை சுற்றி எப்போதுமே ஏதாவது ஒரு சர்ச்சை சுழன்று கொண்டே இருக்கும். நயன்தாரா, திரிஷா, சமந்தா, தமன்னா என எந்த நடிகையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், நடிகை சாய் பல்லவி இதுவரை எந்த காதல் சர்ச்சைகளிலும் சிக்காதவர். அமரன் படத்தின் பூஜை நிகழ்ச்சியின் போது அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அருகே மாலை கழுத்துடன் நின்றிருந்தார். இதை தவறாக புரிந்து கொண்ட வெளியூர் மீடியாக்கள், சாய்பல்லவிக்கு திருமணம் ஆகி விட்டதாக செய்திகளை பரப்பினர். இதற்கு சாய் பல்லவி பின்னர் விளக்கம் அளித்தார். இது தவிர, அவர் வேறு எந்த சர்ச்சையிலும் சிக்கியது இல்லை. 

தற்சமயம் தென்னக மொழிகளில் அசத்தி வரும் சாய்பல்லவி பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து அறிமுகம் ஆக இருக்கிறார். இந்த திரைப்படம் குறித்து அண்மையில் பேசிய அவர், “மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களில் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை தான் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 ஆண்டுகளாக அவரைப் பற்றி படித்து அவரை காதலித்து வருகிறேன்” என கூறியுள்ளார். சாய் பல்லவியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

English Summary

An interview given by actress Sai Pallavi about her love life is currently going viral on the internet

Next Post

நீட் முறைகேடு | உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு இன்று விசாரணை..!!

Thu Jul 11 , 2024
The Supreme Court will hear the case today as the central government has filed a reply in the NEET examination malpractice issue.

You May Like