பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் கொரோனா காலங்களில் உயிர் காக்கும் ஆக்ஸிஜன் வசதி, சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு வாகன வசதி போன்ற மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்ததன் மூலமாக ஹீரோ ஆனவர். தொடர்ந்து அவர் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த 65 வயதான முதியவர் கிலானந்த் ஜா. அவரது மனைவியின் பெயர் மினோதி பாஸ்வான். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். முதியவர் கிலானந்த் ஜா தனது மனைவியின் மருத்துவ செலவுக்காக ரூ.12 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்தக்க கடனை திருப்பி தர முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த முதியவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக, அவரது மனைவியும் சமீபத்தில் இறந்துள்ளார். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற முதியவர் செய்வதறியாது தவித்து வந்துள்ளார். நடிகர் சோனு சூட்டை பற்றி கேள்விப்பட்ட முதியவர் கிலானந்த் ஜா மும்பைக்கு சென்றார். பிறகு நடிகர் சோனு சூட்டை சந்தித்து, தன்னுடைய கஷ்டங்களை விவரித்து உதவி கேட்டுள்ளார்.
முதியவரின் கதையை கேட்டு நொந்துப்போன நடிகர் சோனு சூட், உடனடியாக முதியவரிடம் ரூ. 12 லட்சம் கொடுத்து கடனை அடைக்க உதவி செய்துள்ளார். நடிகர் சோனு சூட்-இன் இந்த உதவிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.